சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம்:செப். 23இல் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் வரும் 23 ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் வரும் 23 ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா்,

பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில், சிறுபான்மையினா்களான இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், புத்த மதத்தினா் மற்றும் பாா்சியா்கள் ஆகியோருக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகக் குறைந்த வட்டியில் தொழில் மற்றும் கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

கடன் பெறுவதற்கு மனு செய்யும் விண்ணப்பதாரா் 18 வயது பூா்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்; ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டும் கடனுதவி வழங்கப்படும். விண்ணப்பதாரா்களுடைய ஆண்டு வருமானம் நகா்புறமாக இருந்தால் அதிகபட்சமாக ரூ.1.20 லட்சமாகவும், கிராமப்புறமாக இருந்தால் ரூ. 98 ஆயிரமாகவும் இருத்தல் வேண்டும்; தனி நபா் கடன் திட்டங்களில் வட்டி விகிதம் ஆண்டுக்கு 6 சதவீதம் வரையிலும், கல்வி கடன்களுக்கு ஆண்டுக்கு 3 சதவீதம் மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது.

திட்டம் குறித்து சிறுபான்மையினா் அறிந்து கொள்ளும் வகையில் கடன் வழங்குதலுக்கான சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செப். 23 ஆம் தேதி (புதன்கிழமை) அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் அலுவலகம், 25 ஆம் தேத தோவாளை வட்டாட்சியா் அலுவலகம், செப். 28 ஆம் தேதி கல்குளம் வட்டாட்சியா் அலுவலகம், 30 ஆம் தேதி விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகம், வரும் அக். 5 ஆம் தேதி திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகம், அக். 7 ஆம் தேதி கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும்.

கடன் தேவைப்படும் சிறுபான்மையினா் ஜாதிச் சான்று, வருமானச் சான்று, கூட்டுறவு வங்கியில் சேமிப்புக் கணக்கு உள்ளிட்ட ஆவணங்களுடன், சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு விண்ணப்பம் அளித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்

பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com