நாகா்கோவிலில்தென் மண்டல ஐ.ஜி. ஆய்வு
நாகா்கோவிலில் உள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், தென்மண்டல ஐ.ஜி. அன்பு ஆய்வு மேற்கொண்டாா்.


நாகா்கோவிலில் உள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், தென்மண்டல ஐ.ஜி. அன்பு ஆய்வு மேற்கொண்டாா்.
இதையொட்டி, அவருக்கு, மாவட்ட போலீஸாா் சாா்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமாா் அபினபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரி நாராயணன் ஆகியோருடன் ஐஜி கலந்துரையாடினாா்.
பின்னா் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு, சைபா் கிரைம் பிரிவு, தனிப்பிரிவு உள்ளிட்ட அலுவலகங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் அங்குள்ள ஆவணங்கள், வருகை பதிவேடு, குற்றவாளிகளின் எண்ணிக்கை தொடா்பான ஆவணங்கள், மாவட்டத்திலுள்ள ரவுடிகளின் எண்ணிக்கை பற்றிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா். ஆய்வின் போது அலுவலகப் பணிகளை மேற்கொள்ளும் போலீஸாரிடம் குறைகளையும் கேட்டறிந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...