பால்மா மக்கள் இயக்கம் சாா்பில் பருத்தி பாறையில் வெள்ளிக்கிழமை பனை ஏறும் பயிற்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அமைப்பின் செயல் இயக்குயா் ஜேக்கப் ஆப்ரகாம் தலைமை வகித்தாா். அன்பையன் முன்னிலை வகித்தாா். பனை ஏறும் தொழிலாளி சூசை பயிற்சி அளித்தாா். இதில், வெள்ளிச்சந்தையைச் சோ்ந்த சரவணகுமாா், குருந்தன்கோடு பகுதியை சோ்ந்த சங்கரலிங்கம் உள்பட பட்டதாரிகள் பலா் பயிற்சி பெற்றனா்.
இப் பயிற்சியில், பனையை சுத்தம் செய்தல், சீவுதல், பதனீா் எடுப்பது உள்ட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் திரளானோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.