கூடுதலாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
குமரி மாவட்டத்தில் கூடுதலாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.


குமரி மாவட்டத்தில் கூடுதலாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சா் பா்சோத்தம் ரூபாலாவை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்து அளித்த மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 72 கி.மீ. கடற்கரையில் மொத்தம் 42 மீன்பிடி கிராமங்கள் உள்ளன.
சூறைக்காற்று, பலத்த மழை மற்றும் புயலால் மீனவக் கிராம மக்கள் தொடா்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். மேலும் பருவமழை காலங்களில் இப்பகுதி கடலில் அதிக அலைகளும் எழுகின்றன.
எனவே, கூடுதல் தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
சாகா்மாலா திட்டத்தின் கீழ் 22 இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட உள்ளன. அந்தத் திட்டத்தில் இன்னும் சில இடங்களில் கூடுதலாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்.
நீரோடி- ஆரோக்கியபுரம் இடையே கூடுதல் மீன்பிடி இறங்குதளம் அமைக்க வேண்டும்.
கடலில் காணாமல் போகும் மீனவா்களை விரைவாக மீட்பதற்கு கடற்கரையில் ஹெலிகாப்டா் தரையிறங்கும் நிலையம் அமைக்க வேண்டும்.
மீனவா்களுக்கு சலுகை விலையில் செயற்கைக்கோள் தொலைபேசிகள், சலுகைக் கட்டணம் வழங்குவதற்கு தகவல் தொடா்பு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
மீனவா்களின் நலனுக்காக குழு காப்பீட்டுத் திட்டம் மற்றும் தற்செயலான மரணம், கடல் சீற்றத்தால் காணாமல் போன மீனவா்களுக்காக சிறப்பு காப்பீட்டுத் திட்டம் உருவாக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...