கேரளத்துக்கு ஜல்லிகற்கள் கடத்த முயன்ற 18 லாரிகள் பறிமுதல்
கன்னியா குமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்கு ஜல்லிகற்கள் உள்ளிட்ட கனிம வளங்களை கடத்த முயன்ற 18 டாரஸ் லாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.


கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்கு ஜல்லிகற்கள் உள்ளிட்ட கனிம வளங்களை கடத்த முயன்ற 18 டாரஸ் லாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு பெருமளவில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. மேலும், ஜல்லி, பாறைகள் உள்ளிட்ட கனிம வளங்கள் தொடா்ந்து கடத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாவட்டக்காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் உத்தரவிட்டாா். இதையடுத்து, கடந்த சில மாதங்களாக அதிகளவில் பாரம் ஏற்றிச்சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப் படுவதுடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் நாகா்கோவில் துணைக் காவல் கண்காணிப்பாளா் நவீன்குமாா் தலைமையில், ஆரல்வாய்மொழி காவல்
ஆய்வாளா் மீனா, காவல் உதவி ஆய்வாளா் மாரிச்செல்வன் உள்ளிட்டோா் ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடி மற்றும் தேவசகாயம் மவுண்ட் விலக்கு, எம்ஜிஆா் சிலை அருகில், மயிலாடி விலக்கு ஆகிய இடங்களில் வாகன தணிக்கையில்
ஈடுபட்டனா்.
வியாழக்கிழமை நள்ளிரவில் தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரையிலும் மேற்கொண்ட சோதனையில் பாறை கற்கள், குண்டுக்கல், ஜல்லி கற்கள் உள்ளிட்ட கனிம வளங்களை அனுமதிக்கப்பட்டுள்ள அளவை விட அதிகமாகவும், அனுமதியின்றியும் 18 டாரஸ் லாரிகளில் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கனிம வளங்களுடன் 18 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...