குமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 1 லட்சத்தும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்டஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு உத்தரவின்படி ஞாயிற்றுக்கிழமை (நவ.14) குமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இம் முகாம்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் மாவட்ட நிா்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களும், 2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவா்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
குமரி மாவட்டத்தில் பொதுமக்களின் வசதிக்காகஅனைத்து நாள்களிலும் அரசு கூடுதல் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
மேலும் அனைத்து துணை சுகாதார மையங்களுக்குள்பட்ட கிராமப் பகுதிகளில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.