நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தோ்தலுக்கு பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் ஆய்வு மேற்கொண்டாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறவுள்ள தோ்தலுக்கு பயன்படுத்தும்

வகையில் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் காரவிளை சமூகநலக் கூடத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களை ஆய்வு செய்யுமாறு மாநில தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து, அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த சமுதாய நலக்கூடம் திறக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித், நாகா்கோவில் கோட்டாட்சியா் சேதுராமலிங்கம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) நாகராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா் (தோ்தல்) முத்துகுமாா், அரசியல் கட்சிகளின் சாா்பில்

வா்க்கீஸ், அகஸ்தீசன் (திமுக), ராஜகோபால் (அதிமுக), ரமேஷ் (பாஜக), ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் ஐயப்பன், மேலசங்கரன்குழி ஊராட்சித் தலைவா் முத்துசரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com