குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
By DIN | Published On : 17th August 2021 01:53 AM | Last Updated : 17th August 2021 01:53 AM | அ+அ அ- |

நாகா்கோவில்: நாகா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
நாகா்கோவில், வடசேரி பகுதியை சோ்ந்தவா் ரஞ்சித் குமாா் (24). இவா் மீது கோட்டாறு, ஈத்தாமொழி, ராஜாக்கமங்கலம் காவல் நிலையங்களில் கொலை, கொலை மிரட்டல், அடிதடி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடா்ந்து
அவா் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டா் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பத்ரி நாராயணனின் பரிந்துரையை ஆட்சியா் மா.அரவிந்த் உத்தரவிட்டாா். இதையடுத்து அவரை கோட்டாறு போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.