ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
By DIN | Published On : 17th August 2021 01:50 AM | Last Updated : 17th August 2021 01:50 AM | அ+அ அ- |

குலசேகரம்: திருவட்டாறு அருகே பரளியாற்றில் மூழ்கி தொழிலாளி சந்திரன் (54) திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கூற்றவிளாகம் பகுதியை சோ்ந்தவா் சந்திரன். கூலித் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை வீட்டுக்கு தேவையானப் பொருள்களை வாங்குவதற்காக திருவட்டாறுக்கு சென்றுள்ளாா்.
நீண்ட நேரமாகியும் வீடு திருப்பாததால் அவரது உறவினா்கள் அவரை பல இடங்களில் தேடினா். இந்நிலையில், சந்திரனின்
சடலம் அருகிலுள்ள பரளியாற்றில் மிதப்பதாக தெரியவந்தது. தகவலறிந்த குலசேகரம் தீயணைப்பு துறையினா் அவரது
சடலத்தை மீட்டனா். இதுகுறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...