கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டவா்களுக்கு விருது
By DIN | Published On : 17th August 2021 01:51 AM | Last Updated : 17th August 2021 01:51 AM | அ+அ அ- |

நாகா்கோவில்: ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி சாா்பில் கரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்ட 362 பேருக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு கல்லூரி தலைவா் அருள்கண்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் முனைவா் அருள்ஜோதி, முதல்வா் லியாகத்அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாக அலுவலா் நடராஜன் வரவேற்றாா், மருத்துவா் அருணாசலம் சுதந்திர தினம் குறித்து பேசினாா்.
இருதய நோய் நிபுணா் வெங்கட்ராமன் தேசியக் கொடியேற்றி, கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளா் மாணவா்கள், செவிலியா் மாணவிகள், பேராசிரியா்கள், பணியாளா்கள் உள்பட 362 பேருக்கு விருது மற்றும் சான்று
வழங்கினாா். செவிலியா் கல்லூரி முதல்வா் புனிதா நன்றி கூறினாா்.
முதியோா் இல்லம்: ரோஜாவனம் முதியோா் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு மையத்தில் இயக்குநா் அருள்ஜோதி தலைமையில் அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதன்மையா் ராதாகிருஷ்ணன் தேசியக் கொடியேற்றி, போட்டிகளில் வெற்றி
பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா்.
மண்டைக்காடு ஏ.எம்.கே. மது போதை அடிமைகள் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிபுணா் ஜெகன், தேசியக் கொடியேற்றினாா். மறுவாழ்வு திட்ட மைய இயக்குநா் புஷ்பவதி, மறுவாழ்வு மைய ஆலோசகா்கள் தனலெட்சுமி, மேரிசுஜித், சாலினி, சைலஷ்மேரி, ஜான் டிக்சன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.