சாராயம் பதுக்கல்: ஒருவா் கைது
By DIN | Published On : 20th August 2021 12:33 AM | Last Updated : 20th August 2021 12:33 AM | அ+அ அ- |

தக்கலை அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தக்கலை மதுவிலக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜரத்தினம் மற்றும் காவலா்கள், தக்கலை வெட்டிக்குழி பகுதியில் ரோந்து சென்றபோது, அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த சிபு (44) என்பதும், சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவா் பதுக்கி வைத்திருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...