சீன நாட்டு மீன்பிடி வலைகளை தடை செய்ய வலியுறுத்தல்
By DIN | Published On : 20th August 2021 12:34 AM | Last Updated : 20th August 2021 12:34 AM | அ+அ அ- |

சீனாவிலிருந்து முறைகேடாக இறக்குமதி செய்யப்படும் மீன்வலைகளை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட மீன்வலை தயாரிப்போா் சங்கச் செயலா் நாகூா்கான், அகில இந்திய மீன் வலை தயாரிப்பாளா்கள் சங்கத் தலைவா் சுப்பு , குஜராத் பொ்டிலைசா்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவன சென்னை மண்டல மேலாளா் ஸ்ரீதா் ஆகியோா், மத்திய மீன்வளத் துறை அமைச்சா் க. முருகனை சந்தித்து அளித்துள்ள மனு: சீனாவில் தயாரிக்கப்பட்ட மீன் வலைகள் முறைகேடாக இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் உள்நாட்டு உற்பத்தியாளா்கள் பாதிக்கப்படுகின்றனா். மேலும் சீனநாட்டில் தயாரிக்கப்படும் மீன் வலைகள் தரத்திலும் மிகவும் மோசமாக உள்ளது.
எனவே, சீன நாட்டு தயாரிப்பு மீன் வலைகள் இறக்குமதிக்கு தடைவிதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது, தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, முன்னாள் எம்.பி. ராமலிங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.