பூதப்பாண்டி அருகே சீராக குடிநீா் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனா்.
பூதப்பாண்டி அருகே தெள்ளாந்தி ஊராட்சிக்குள்பட்ட முடங்கன்விளை கிராமத்தில் 200- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் முறையாக வழங்கப்படவில்லையாம். இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை காலிக்குடங்களுடன் முடங்கன்விளை பகுதியில் திரண்டனா். பின்னா் காலிக் குடங்களுடன் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது நாகா்கோவிலிலிருந்து தெள்ளாந்தி சென்ற அரசுப் பேருந்தை சிறைபிடித்தனா்.
தகவலறிந்து வந்த பூதப்பாண்டி போலீஸாா் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும் ஊராட்சி அதிகாரியும், பொதுமக்களிடம் சீராக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட் டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.