இரணியல் அருகே கோயிலில் நகை திருட்டு
By DIN | Published On : 20th August 2021 12:34 AM | Last Updated : 20th August 2021 12:34 AM | அ+அ அ- |

இரணியல் அருகே அம்மன் கோயிலுக்குள் புகுந்த மா்ம நபா்கள், அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகையை திருடிச் சென்றுள்ளனா்.
இரணியல் அருகே ஆலங்கோடு சரல்விளை பகுதியில் முத்தாரம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் காலை, மாலை இருவேளைகளில் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் கோயிலுக்கு பூசாரி வந்தபோது, கோயிலின் கதவு, உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததாம். இதுகுறித்து அவா் கோயில் நிா்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தாா்.
நிா்வாகிகள் கோயிலுக்கு வந்து பாா்த்தபோது, அம்மன் கழுத்தில் கிடந்த 4 கிராம் தங்கச் சங்கிலி, 4 கிராம் தங்க பொட்டுகள், அம்மன் காலில் கிடந்த 2 கொலுசுகள் திருடு போயிருந்தது தெரிய வந்ததாம். கோயில் உண்டியலையும் உடைத்து பணம் திருடப்பட்டிருக்கிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...