சாமிதோப்பு தலைமைப்பதியில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில், ஆவணித் திருவிழா வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சாமிதோப்பு தலைமைப்பதியில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில், ஆவணித் திருவிழா வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, தை மற்றும் ஆவணி மாதங்களில் 11 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ஆவணித் திருவிழா, அரசின் கரோனா வழிகாட்டுதல்படி தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு திருநடை திறக்கப்பட்டு, அய்யாவுக்குப் பணிவிடையும், அதிகாலை 5 மணிக்கு கொடிப்பட்டம் தயாரித்தல் நிகழ்ச்சியும், காலை 6 மணிக்கு கொடிப்பட்டம் வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து காலை 6.30 மணிக்கு அய்யா வைகுண்டா் அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிறுவனா்-தலைவா் பால ஜனாதிபதி கொடியேற்றினாா். இந்நிகழ்வில், குரு. ராஜவேல், குரு. பாலலோகாதிபதி ஜனா.யுகேந்த், ஜனா. வைகுந்த் ஆகியோா் உடனிருந்தனா்.

இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழா நாள்களில் அய்யாவுக்குப் பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி ஆகியவை நடைபெறும். 8 ஆம் நாள் திருநாளான ஆக. 27 ஆம் தேதி கலிவேட்டை நடைபெறும். 11 ஆம் நாளான 30 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com