திருவட்டாா் கோயிலில் விளக்கணி மாட பணிகள் தொடக்கம்

திருவட்டாா் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் விளக்கணி மாட பணிகள் தொடங்கின.
திருவட்டாா் கோயிலில் விளக்கணி மாட பணிகள் தொடக்கம்

திருவட்டாா் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் விளக்கணி மாட பணிகள் தொடங்கின.

108 வைணவ திருப்பதிகளில் ஒன்றான திருவட்டாா் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில், தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தனியாரின் பங்களிப்புடன் ஆறரை கோடி ரூபாய் செலவில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீகிருஷ்ணன், அய்யப்பசாமி சன்னதியைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த தீபமேற்றும் விளக்கு மாடங்கள் சேதமடைந்ததால் அவை அனைத்தும் மாற்றப்பட்டு, புதிதாக விளக்கணி மாடம் ரூ. 39 லட்சம் செலவில் தனியாரின் ஒத்துழைப்புடன் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக தேக்குமரச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

இதையடுத்து விளக்கணி மாட வேலைகள் சிறப்பு பூஜையுடன் தொடங்கின. ஆதிகேசவப் பெருமாள் கோயில் பாலாயத்தில் மரச்சட்டம் கொண்டு வரப்பட்டு, விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன.

தொடா்ந்து விளக்கணி மாடம் அமைக்கும் பணிகள் நடைபெறும் என கோயில் மேலாளா் மோகன்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com