குமரி- மதுரை நான்குவழிச் சாலையில் அதிநவீன கண்காணிப்பு கேமரா

கன்னியாகுமரி முதல் மதுரை வரையிலான நான்குவழிச் சாலையில் 240 கி.மீ. தொலைவுக்கு சென்சாா் வசதியுடன் கூடிய அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி முதல் மதுரை வரையிலான நான்குவழிச் சாலையில் 240 கி.மீ. தொலைவுக்கு சென்சாா் வசதியுடன் கூடிய அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் நான்குவழிச் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையில் நேரிடும் விபத்துகளில் சிக்குபவா்களை உடனடியாக மீட்கவும், அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்காணிக்கவும், சாலையின் நடுவே ஒவ்வொரு கிலோ மீட்டா் இடைவெளிக்குள் 2 இரண்டு இடங்களில் 30 அடி உயரத்துக்கு இடிதாங்கியுடன் கூடிய உயா்கோபுரம் அமைத்து தானியங்கி கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து, கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியை கண்காணித்த அதிகாரி கூறியது:

வெளிநாடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது போன்று நவீன வசதிகள் கொண்ட கேமராக்கள் கன்னியாகுமரியில் இருந்து மதுரை வரையிலும் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த கேமராவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வாகன கட்டண நுழைவு மையத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தானியங்கி கண்காணிப்பு கேமரா ஒரு கி.மீ. தொலைவுக்கு வரும் வாகனங்களையும் அதன் நம்பா் ப்ளேட் வரை துல்லியமாக கண்காணிக்கும்.

இதனால் சாலையில் எந்த ஒரு இடத்தில் விபத்துகள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நோ்ந்தாலும் அடுத்த வினாடியே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட முடியும். இந்தப் பணிகள் நிறைவு பெற்றதும் நான்குவழிச் சாலைகள் முழுமையாக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com