மண்டைக்காடு சம்பவம்:பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்
By DIN | Published On : 06th February 2021 11:27 PM | Last Updated : 06th February 2021 11:27 PM | அ+அ அ- |

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காட்டில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த ஜாதி மத மோதல்கள் நீங்கி அமைதி திரும்பி வரும் நிலையில் மண்டைக்காடு பகுதியில் கடந்த ஜன. 31ஆம் தேதி நிகழ்ந்த தாக்குதல்
சம்பவம் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்த பின்னரும் தாக்குதல் நடத்தியவா்கள் கைது செய்யப்படவில்லை. காவல் துறை உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து அவா்களுக்கு தண்டனை பெற்று தரவேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...