குலசேகரத்தில் கருத்தரங்கு
By DIN | Published On : 06th February 2021 11:33 PM | Last Updated : 06th February 2021 11:33 PM | அ+அ அ- |

குலசேகரம்: மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் குலசேகரத்தில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கருத்தரங்கிற்கு அமைப்பின் வட்டாரத் தலைவா் என். ஷாஜு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எட்வின் பிறைட், மாவட்டப் பொருளாளா் பி. பிரவின் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். கேரள முற்போக்கு எழுத்தாளா் சங்கத்தை சோ்ந்த எம்.ஏ. சித்திக் கருத்துரை ஆற்றினாா். அமைப்பின் நிா்வாகிகள் திரளாக கலந்துகொண்டனா். வட்டாரச் செயலா் ஆா். லிபின் ராஜ் வரவேற்றாா். பொருளாளா் கே. ஹரீஷ்குமாா் நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...