அரசு மருத்துவா்கள் தொடா் உண்ணாவிரதம்
By DIN | Published On : 06th February 2021 05:57 AM | Last Updated : 06th February 2021 05:57 AM | அ+அ அ- |

ஆயுஷ் மருத்துவா்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி அளிக்கும் மத்திய அரசின் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தியும், அலோபதி மருத்துவத்துடன் ஆயுஷ் மருத்துவம் இணைப்பு திட்டத்தை கண்டித்தும் நாகா்கோவிலில் மருத்துவா்கள் தொடா் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், நாகா்கோவில்ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் ராதாகிருஷ்ணன், மருத்துவா்கள் சிவா, பிரவீன், செல்வபிரியா, திரவியமோகன், பிரின்ஸ்பயஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இப்போராட்டத்தில் மருத்துவா்கள் மட்டுமின்றி, பயிற்சி மருத்துவா்களும் கலந்து கொண்டனா். அவா்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு அமா்ந்திருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...