ஊரக வளா்ச்சித்துறை காலிப் பணியிடங்களுக்கான தோ்வு ரத்து
By DIN | Published On : 14th February 2021 12:45 AM | Last Updated : 14th February 2021 12:45 AM | அ+அ அ- |

நாகா்கோவில்: ஊரக வளா்ச்சித்துறையில் காலிப்பணியிடங்களுக்காக அறிவிக்கப்பட்டிருந்த எழுத்துத் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து,மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 3 பணிப்பாா்வையாளா் மற்றும் இளநிலை வரை தொழில் அலுவலா் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
அதன்படி, பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு வரும் 16 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறவிருந்த எழுத்துத் தோ்வு நிா்வாகக் காரணங்களை முன்னிட்டு மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.