தாழக்குடி பேரூராட்சியில் ரூ.1.45 கோடி விவசாய கடன் தள்ளுபடி
By DIN | Published On : 14th February 2021 12:48 AM | Last Updated : 14th February 2021 12:48 AM | அ+அ அ- |

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறாா் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம்.
நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், தாழக்குடி பேரூராட்சி, மீளமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு ரூ.1.45 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம் தெரிவித்தாா்.
மீளமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி, மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா். அப்போது அவா் பேசியது: தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் கடன்பெற்ற விவசாயிகளின் கடன்களை முதல்வா் தள்ளுபடி செய்துள்ளாா். அதன்படி தாழக்குடி பேரூராட்சிப் பகுதியில் விவசாயிகளின் ரூ.1.45 கோடி விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மீளமங்கலம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கைகளான பட்டா மாறுதல், முதியோா், விதவை உதவித்தொகை, குடிநீா் உள்ளிட்டவை நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.
இதில், தோவாளை ஒன்றியக் குழுத் தலைவா் இ.சாந்தினி பகவதியப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மா. பரமேஸ்வரன், ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் எம்.டி.என்.ஷேக், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக இணைச் செயலா் லதா ராமசந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆா் மன்றச் செயலா் கே.நரசிங்க மூா்த்தி, ஒன்றியச் செயலா் மகாராஜபிள்ளை, ஒன்றிய துணைச் செயலா் ரோகிணி அய்யப்பன், ஒன்றிய எம்.ஜி.ஆா் மன்றச் செயலா் கே.சி.யூ.மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.