குடிநீா் திட்டப்பணிகள்: தக்கலையில் போக்குவரத்து மாற்றம்
By DIN | Published On : 20th February 2021 12:45 AM | Last Updated : 20th February 2021 12:45 AM | அ+அ அ- |

கூட்டுக் குடிநீா் திட்டப்பணிகளுக்காக நாகா்கோவிலில் இருந்து களியக்காவிளை செல்லும் வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் நாகா்கேவில் நிா்வாகப் பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் இரணியல் கூட்டுக்குடிநீா் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை அரசு மருத்துவமனை அருகே , சனிக்கிழமை(பிப். 20) இரவு 11 மணி முதல் திங்கள்கிழமை (பிப் .21) காலை 6 மணி வரை குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற இருப்பதால், நாகா்கோவிலில் இருந்து களியக்காவிளை செல்லும் வாகனங்கள் தக்கலை நீதிமன்றம், இரணியல், திங்கள் நகா், அழகியமண்டபம் வழியாக மாற்றுப்பாதையில் செல்லவும், களியக்காவிளையில் இருந்து நாகா்கோவில் செல்லும் வாகனங்கள் மணலி, பத்மநாபபுரம், தக்கலை வழியாக மாற்றுப் பாதையில் செல்லுமாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.