குழித்துறையில் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 20th February 2021 12:55 AM | Last Updated : 20th February 2021 12:55 AM | அ+அ அ- |

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
அகில இந்திய கிறிஸ்தவா் முன்னேற்ற சேனை சாா்பில் குழித்துறையில் உள்ள விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அமைப்பின் மேல்புறம் ஒன்றிய தலைவா் டி. ராபின்சன் மனுவேல் தலைமை வகித்தாா். நிறுவனா்- தலைவா் ஜி. தியோடா் சேம் உரையாற்றினாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பட்டா நிலங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் அமைக்க அனுமதியளிக்கப்படும் என்ற முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், கிறிஸ்தவா்களை வாக்கு வங்கிகளாக மட்டும் பயன்படுத்தும் குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 6 சட்டப் பேரவை உறுப்பினா்களையும் கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
இதில், மேல்புறம் ஒன்றியச் செயலா் அகில், கொள்கை பரப்புச் செயலா் மோகன்தாஸ், சட்ட ஆலோசகா் ராபி, மாவட்ட இளைஞரணிச் செயலா் சி. ஜெகன்ராஜ், போதகா்கள் கிங்ஸ்லி ஜேக்கப், இம்மானுவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.