கூட்டுக் குடிநீா்த் திட்டத்திற்காக சேதப்படுத்த சாலைகள் : பொதுமக்கள் அவதி

அழகியபாண்டியபுரம் பகுதியில் கூட்டுக்குடித் திட்ட குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலை சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனா்.
உடைக்கப்பட்ட சாலை வழியாகச் செல்லும் பேருந்துகள்
உடைக்கப்பட்ட சாலை வழியாகச் செல்லும் பேருந்துகள்

அழகியபாண்டியபுரம் பகுதியில் கூட்டுக்குடித் திட்ட குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலை சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனா்.

அழகியபாண்டிய புரம் கூட்டுக்குடிநீா்த் திட்டத்திற்காக திற்பரப்பு அருவி அருகே களியல் பகுதியில் கோதையாற்றிலிருந்து தண்ணீா் எடுத்துச் செல்லப்படும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமாா் 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப் பணிகள் இதுவரை முழுமையாக நிறைவடையவில்லை. இத்திட்டத்திற்காக களியல் முதல் அழகியபாண்டிய புரம் வரை சாலை உடைக்கப்பட்டு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதில் சாலையை உடனுக்குடன் சீரமைக்கப்படாததால் ஏராளமான விபத்துகள் ஏற்பட்ட நிலையில், தற்போது அழகியபாண்டிய புரத்திலிருந்து குலசேகரம் செறுதிக்கோணம் வரை சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செறுதிக்கோணம் முதல் களியல் வரையிலான சுமாா் 5 கிலோ மீட்டா் தொலைவு செப்பனிடப்படவில்லை. இப்பகுதியை செப்பனிடும் வகையில், அண்மையில் கடந்த டிசம்பா் மாதம் ஜல்லிக்கற்கள் நிரப்பப்பட்ட நிலையில், பணிகள் தொடா்ந்து நடத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனா். மேலும் சாலையிலிருந்து தொடா்ந்து புழுதி பறந்த வண்ணம் இருப்பதால் வணிகா்களும், வீடுகளில் வசிக்கும் பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனா். இச் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென்று வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com