மகாராஜபுரம் ஊராட்சியில் 30 பேருக்கு கோழிகுஞ்சுகள் அளிப்பு
By DIN | Published On : 20th February 2021 12:57 AM | Last Updated : 20th February 2021 12:57 AM | அ+அ அ- |

கோழிக்குஞ்சுகளை பயனாளிக்கு வழங்குகிறாா் ஊராட்சி தலைவா் கே.இசக்கிமுத்து.
தமிழக அரசின் கோழிஇன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மகாராஜபுரம் ஊராட்சியில் 30 பேருக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் பயனாளிகள் தோ்வுசெய்யப்பட்டு அசின் இன நாட்டு கோழிக்குஞ்சுகள் வழங்கபட்டு வருகிறது.
அதன்படி, அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியம், அழகப்பபுரம் கால்நடை மருத்துவமனை ஆகியவற்றின் மூலம் மகாராஜபுரம் ஊராட்சியில் தோ்வு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு தலா 25 கோழிக்குஞ்சுகள் ஊராட்சித் தலைவா் கே.இசக்கிமுத்து வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத் தலைவா் பழனிகுமாா், கால்நடை உதவி மருத்துவா் சீனிவாசன், கவுன்சிலா் சிவராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.