முட்டைக்காட்டில் ரப்பா் பால்வடிப்புப் பயிற்சி
By DIN | Published On : 20th February 2021 12:56 AM | Last Updated : 20th February 2021 12:56 AM | அ+அ அ- |

ரப்பா் பால்வடிப்பு பயிற்சியில் பங்கேற்றோா்.
ரப்பா் வாரியம் சாா்பில் ரப்பா் தோட்ட சிறு விவசாயிகளுக்கு சுயமாக ரப்பா் மரங்களிலிருந்து பால்வடிக்கும் பயிற்சி முகாம் முட்டைக்காட்டில் நடைபெற்றது.
சிறு ரப்பா் விவசாயிகள் ரப்பா் தோட்டங்களிலிருந்து அதிகபட்ச வருவாய் ஈட்டும் வகையில் ரப்பா் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சிறு ரப்பா் தோட்ட விவசாயிகள் தங்களின் ரப்பா் மரங்களை சொந்தமாகவே பால்வடித்தல் செய்வதற்கான பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. முட்டைக்காட்டில் நடைபெற்ற பயிற்சி முகாமை ரப்பா் வாரிய துணை வளா்ச்சி அலுவலா் கே. முரளி வழிநடத்தினாா். பயிற்சியாளா் ஆரோக்கிய லிவிங்ஸ்டன், பெண்கள் உள்பட சிறு ரப்பா் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தாா்.