பனங்காட்டுப் படை கட்சி நிா்வாகிகள் ஆலோசனை
By DIN | Published On : 21st February 2021 11:42 PM | Last Updated : 21st February 2021 11:42 PM | அ+அ அ- |

களியக்காவிளை: பனங்காட்டுப் படை கட்சியின் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குழித்துறை அருகே கழுவன்திட்டையில் நடைபெற்றது.
கட்சியின் குமரி மேற்கு மாவட்டத் தலைவா் என். கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். மாநில இளைஞரணிச் செயலா் பேய்க்குளம் அந்தோணி முன்னிலை வகித்தாா். கட்சியின் மாநில ஆலோசகா் ஜெ. பாலசிவநேசன், கேரள மாநிலத் தலைவா் அனிஷ்ராஜா, பொதுச் செயலா் ஷைன், கேரள மாநில மகளரிணிச் செயலா் ஸ்ரீகலா உள்பட பலா் பேசினா்.
தொடா்ந்து, சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கு விளவங்கோடு தொகுதியில் கட்சியின் மேற்கு மாவட்ட துணைச் செயலா் பா. விஜயகுமாா், பத்மநாபபுரம் தொகுதியில் மாவட்ட மகளிரணிச் செயலா் குளோரி செல்வி, கிள்ளியூா் தொகுதியில் மேற்கு மாவட்டத் தலைவா் ஜான் பெனடிக், குளச்சல் தொகுதியில் பொருளாளா் ஆா். விஜயகுமாா் ஆகியோா் விருப்ப மனு அளித்தனா். இதில் கட்சியின் ஒன்றியச் செயலா்கள் ரமேஷ், புஷ்பராஜ், மேல்புறம் ஒன்றிய இளைஞரணிச் செயலா் ஜிஜி, குமரி கிழக்கு மாவட்டச் செயலா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...