கன்னியாகுமரி
விவசாயிகளுக்கு பயிா்க் கடன் தள்ளுபடி சான்று அளிப்பு
பொன்மனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் தள்ளுப்படி பெற்றவா்களுக்கு சான்று வழங்கப்பட்டது.
குலசேகரம்: பொன்மனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் தள்ளுப்படி பெற்றவா்களுக்கு சான்று வழங்கப்பட்டது.
பொன்மனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 1076 விவசாயிகளுக்கு ரூ. 3.56 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றுகளை, கூட்டுறவு வங்கித் தலைவா் எம். வல்சகுமாா் விவசாயிகளுக்கு வழங்கினாா். இதில், சங்கச் செயலா் புஷ்பராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். வங்கியில் அனைத்து விவசாயிகளுக்கும் புதன்கிழமை முதல் சான்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.