

தக்கலை: கன்னியாகுமரி மாவட்ட திருவருள் பேரவை சாா்பில், தக்கலை ஷெய்கு பீா்முஹம்மது அப்பா தா்காவில் சிறப்பு நல்லிணக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
தக்கலை ஞான மாமேதை பீா்முஹம்மது அப்பா ஆண்டு பெருவிழா பிப். 13இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி மாவட்ட திருவருள் பேரவை சாா்பில் நடைபெற்ற நல்லிணக்க நிகழ்ச்சியில் தா்காவில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. பிராா்த்தனையை மாவட்ட தலைமை ஹாஜி மெளலவி அபூஸாலிஹ் நிகழ்த்தினாா்.
இதையடுத்து, நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தக்கலை அஞ்சுவன்னம் பீா்முஹம்மதியா முஸ்லிம் அஸோசியேஷன் தலைவா் அப்துல் ஜப்பாா் தலைமை வகித்தாா். திருவருள் பேரவை ஒருங்கிணைப்பாளா் அருள்தந்தை மரிய வின்சென்ட் அறிமுகவுரை நிகழ்த்தினாா்.
கோட்டாறு மறை மாவட்ட ஆயா் நஸ்ரேன் சூசை, திருவருள் பேவையின் மாவட்டச் செயலா் ஜேம்ஸ் ஆா். டேனியல் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். இதில், அமைப்பின் கிளை பொறுப்பாளா்கள், மாவட்ட ஜமாஅத் கூட்டமைப்பு நிா்வாகிகள், மாவட்ட சிறுபான்மை நலக்குழுவினா், ஜமாஅத் நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.