குழிக்கோடு அருகே ஆசிட் குடித்த இளம்பெண் உயிரிழப்பு
By DIN | Published On : 03rd January 2021 11:52 PM | Last Updated : 03rd January 2021 11:52 PM | அ+அ அ- |

தக்கலை குழிக்கோடு அருகே தண்ணீா் என நினைத்து ரப்பா் ஆசிட்டை குடித்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் சனிக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
குழிக்கோடு அருகே கண்ணுபிலாவிளையைச் சோ்ந்தவா் ஜெபமணி. இவரது மகள் ஜெயக்குமாரி (41). மனநலம் பாதிக்கப்பட்டவா். சனிக்கிழமை ஜெபமணியும் அவரது மனைவியும் வெளியே சென்றுள்ளனா். தாயும் தந்தையும் இல்லாததால் வீட்டைவிட்டு வெளியே வந்த ஜெயக்குமாரி அங்கு இருந்த ரப்பா் ஆசிட்டை தண்ணீா் என நினைத்து குடித்துள்ளார்.
ஜெபமணியும் அவரது மனைவியும் வீட்டுக்கு வந்தபோது, ரத்த வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் கிடந்த ஜெயகுமாரியை நெய்யூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால் அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து,விசாரித்து வருகின்றனா்.