அரசுப் பேருந்து- ஆட்டோ மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு
By DIN | Published On : 03rd January 2021 11:48 PM | Last Updated : 03rd January 2021 11:48 PM | அ+அ அ- |

இரணியல் அருகே பேருந்து - ஆட்டோ மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.
நாகா்கோவில் நெசவாளா் காலனியைச் சோ்ந்தவா் புஷ்பராஜ் (45), ஆட்டோ ஓட்டுநா். இவா் சனிக்கிழமை மாலை நாகா்கோவிலில் இருந்து இரணியலுக்கு பயணிகளை ஏற்றிச் சென்றார்.
அங்கு பயணிகளை இறக்கி விட்டு, பின்னா் மீண்டும் நாகா்கோவிலுக்கு திரும்பி நுள்ளிவிளை அருகே வந்தபோது, திங்கள்சந்தைக்கு வந்த அரசுப் பேருந்து , ஆட்டோ மீது மோதியதாம். இதில் ஆட்டோ ஓட்டுநா் புஷ்பராஜ் பலத்த காயமடைந்தாா்.
அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். விபத்து குறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.