தோவாளை பெரியகுளம் சீரமைப்பு பணிகள்:ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 03rd January 2021 11:44 PM | Last Updated : 03rd January 2021 11:44 PM | அ+அ அ- |

தோவாளை பெரியகுளத்தில் ரூ.84 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
இக்குளம் மூலம் 71.25 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மழைக் காலங்களில் அதிகநீா் வரும்போது, இக்குளத்திலுள்ள உபரிநீா் அங்குள்ள தெற்கு மலை ஓடை, மறுகால் ஓடை வழியாக பழையாற்றிற்கு செல்கிறது.
இந்தக் குளத்தின் மதகுகள், மறுகால் ஓடைகளை சீரமைக்க ரூ. 84 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் (நீா்வள ஆதார அமைப்பு) வசந்தி, உதவி செயற்பொறியாளா் அருள்சன் பிரைட், உதவிப் பொறியாளா் வின்ஸ்டன் லாரன்ஸ் உள்ளிட்டோா் இருந்தனா்.