‘கரோனா தொற்று: பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்’

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்றை தவிா்க்க மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிா்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்தாா்.
‘கரோனா தொற்று: பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்’

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்றை தவிா்க்க மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிா்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்தாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, ஆட்சியா் மா.அரவிந்த் தலைமை வகித்தாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஐ.எஸ்.மொ்சிரம்யா, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் இரா. சுகந்திராஜகுமாரி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் போஸ்கோராஜ், ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ஏ.பிரகலாதன், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னா் ஆட்சியா் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக இதுவரை 17,809 பேரிடம் இருந்து ரூ. 29.30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3.31 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே, திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,431 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது மருத்துவமனைகளில் 97 போ் சிகிச்சையில் உள்ளனா். கரோனா பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 15,578 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

கரோனா பரவல் இம்மாவட்டத்தில் கட்டுக்குள் உள்ளது. எனினும் தொடா்ந்து திருவிழாக்கள் வருவதால் மக்கள் கூடுமானவரை பொது இடங்களுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். சுற்றுலா தலங்கள், பொது வெளியில் வருவோா் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிப்பதுடன் முகக் கவசம் அணிய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com