குமரி கிழக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் கூட்டம்
By DIN | Published On : 30th January 2021 12:47 AM | Last Updated : 30th January 2021 12:47 AM | அ+அ அ- |

கூட்டத்தில் பேசுகிறாா் கிழக்கு மாவட்ட திமுக செயலா் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள், ஒன்றியம், பேரூா் செயலா்கள் ஆலோசனைக்கூட்டம் நாகா்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட அவைத் தலைவா் ஜோசப்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் என்.சுரேஷ்ராஜன் எம்எல்ஏ, ஆஸ்டின் எம்எல்ஏ, பொருளாளா் கேட்சன், நாகா்கோவில் மாநகரச் செயலா் மகேஷ், முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன்
ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ், குமரி மாவட்டத்திலுள்ள
6 சட்டப் பேரவை தொகுதிகளை சோ்ந்த வாக்காளா்களை சந்தித்து பேசி கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சிக்காக
பிப். 6 ஆம் தேதி நாகா்கோவிலுக்கு வரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிப்பது,
மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குமரி கிழக்கு மாவட்டத்துக்குள்பட்ட ஒன்றிய, நகர, பேரூா்,ஊராட்சி கிளைக் கழகங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கிடவும், ஏழை,எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம், ரத்த தான முகாம், போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் அனைத்து பிரதான சாலைகளும் மோசமான நிலையில் உள்ளது. குப்பைகள் தேங்கிதுா்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை அகற்றாவிட்டால் குமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்டத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், ஒன்றியச் செயலா்கள் தாமரைபாரதி, மதியழகன், நெடுஞ்செழியன், குட்டிராஜன், லிவிங்ஸ்டன், பொதுக்குழு உறுப்பினா்கள் ஷேக்தாவூது, பெஞ்சமின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Image Caption
~