வாகா முதல் குமரி வரை பெண்கள் பங்கேற்ற விழிப்புணா்வு காா் பயணம் நிறைவு
By DIN | Published On : 30th January 2021 12:52 AM | Last Updated : 30th January 2021 12:52 AM | அ+அ அ- |

கன்னியாகுமரியில் நிறைவடைந்த காா் பயணம்.
சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வை வலியுறுத்தி வாகா எல்லையில் தொடங்கிய காா் பயணம் கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
32 ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு வாரவிழா நாடுமுழுவதும் நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு டிரவ் ஸ்மாா்ட், டிரவ் ஸேவ் என்ற அமைப்புகள் சாா்பில் 5 பெண்கள் பங்கேற்ற விழிப்புணா்வு காா் பயணம் கடந்த 18ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் தொடங்கியது.
இந்தப் பயணம் தில்லி, ஜெய்ப்பூா், உதய்பூா், மும்பை, கோவா, கோலாப்பூா், கோழிக்கோடு, திருவனந்தபுரம் வழியாக 3 ஆயிரத்து 500 கி.மீ. தொலைவைக் கடந்து கன்னியாகுமரி காந்திமண்டபம் முன் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
இப்பயணத்தை கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன் பயணத்தை நிறைவு செய்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளா் ஆவுடையப்பன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஜாய்சன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...