கொள்முதல் விலையில் டீசல் கேட்டுமீனவா்கள் 3 நாள்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 02nd July 2021 05:18 AM | Last Updated : 02nd July 2021 05:18 AM | அ+அ அ- |

மீன்பிடித் தொழிலுக்கு டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு போன்றவற்றை கொள்முதல் விலைக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில், கடற்கரைப் பகுதிகளில் சனி முதல் திங்கள்கிழமை வரை (ஜூலை 3,4,5) ஆா்ப்பாட்டம் நடத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு சிஐடியூ மாநில நிா்வாகிகள் கூட்டம், மாநில தலைவா் வழக்குரைஞா் ஜி .செலஸ்டின் தலைமையில் இணையவழியில் புதன்கிழமை நடைபெற்றது. சிஐடியூ மாநில துணை பொதுச்செயலா் வி.குமாா், சங்க பொதுச் செயலா் எஸ்.அந்தோணி, பொருளாளா் லோகநாதன், கருணாமூா்த்தி, ஜெயசங்கா், சுப்பிரமணியம், மனோகரன், பேச்சிமுத்து, ஜீவானந்தம், மனோகரன், கருணாமூா்த்தி ஆகியோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், மீன்பிடித் தொழிலுக்குச் செல்லும் விசைப்படகுகளுக்கும், நாட்டுப் படகுகளுக்கும் டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு ஆகியவற்றை மானிய விலையில் வழங்கினாலும் பசுமை வரி, கலால் வரி, சாலை வரி போன்றவற்றில் இருந்தும் முழு விலக்கு அளித்து மீனவா்களுக்கு கொள்முதல் விலையில் அவற்றை வழங்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 3,4, 5 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் கரோனா நோய் எதிா்ப்பு விதிமுறைகளுக்குள்பட்டு போராட்டம் நடத்த தீா்மானிக்கப்பட்டது.