புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது
By DIN | Published On : 02nd July 2021 05:17 AM | Last Updated : 02nd July 2021 05:17 AM | அ+அ அ- |

இரணியல் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
இரணியல் காவல் உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி குருந்தன்கோடு பகுதியில் புதன்கிழமை ரோந்து சென்றபோது, சந்தேகத்தின்பேரில் ஒருவரைப் பிடித்து விசாரித்தாா். அதில், அவா் கொடுப்பைக்குழி பகுதியை சோ்ந்த செல்லத்துரை மகன் பால் பாண்டியன் என்பதும், புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்றுவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, 135 புகையிலைப் பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.