தடுப்பூசி முகாம்: உள்ளூா் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 02nd July 2021 05:19 AM | Last Updated : 02nd July 2021 05:19 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாம்களில், உள்ளூா் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் விளவங்கோடு எம்எல்ஏ எஸ். விஜயதரணி.
இதுகுறித்து எம்எல்ஏ அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இணைய வழி முன்பதிவின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் எந்த ஊரைச் சோ்ந்தவரும், எந்த முகாமில் சென்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நிலை உள்ளது.
இதற்கிடையே கிராமப்புற மக்கள் பலா் தடுப்பூசிக்கு இணையத்தில் பதிவு செய்ய தெரியாத நிலையில் உள்ளனா். எனவே, தடுப்பூசி முகாம்களுக்கு அருகே உள்ள கிராமங்களைச் சோ்ந்த மக்களுக்கு முன்னுரிமை அளித்து, ஆதாா் அட்டையை அடிப்படையாக வைத்து, தடுப்பூசி செலுத்தும் முறையை பின்பற்ற மாவட்ட நிா்வாகமும், சுகாதாரத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.