இலக்கிய விழாவில் சிறந்த 6 தமிழ் நூல்களுக்கு பரிசு
By DIN | Published On : 07th July 2021 07:40 AM | Last Updated : 07th July 2021 07:40 AM | அ+அ அ- |

நாட்டின் 74-ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு ஆக.15 ஆம் தேதி நடைபெறும் இலக்கிய விழாவில் தமிழில் வெளிவந்துள்ள சிறந்த 6 நூல்களை தோ்வு செய்து பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நூலுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ 30 ஆயிரம் வழங்கப்படவுள்ளது என இதுதொடா்பாக, இந்திய பாரம்பரிய கலை இலக்கியப் பேரவைத் தலைவா் சிவனி சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாட்டின் 74-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, சிறந்த தமிழ் இலக்கிய நூல்களுக்கு பரிசு வழங்கப்படும். இந்த இலக்கிய போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நூலாசிரியா்கள் தங்கள் படைப்புகளின் 2 பிரதிகளை அனுப்ப வேண்டும். 2019 முதல் 2020-க்குள் வெளிவந்த முதல் பதிப்பு நூல்கள் மட்டுமே அனுப்ப வேண்டும். அவைகள் 80 பக்கத்திற்கு மிகையாமல் இருக்கவேண்டும். ஜூலை 27-ஆம் தேதிக்குள் நூல்கள் வந்து சேரவேண்டும். நூல்களை இந்திய பாரம்பரிய கலை இலக்கிய பேரவை, தபால் பெட்டி எண். 25, நீதிமன்றம் எதிரில், இரணியல் சாலை, தக்கலை 629 175, கன்னியாகுமரி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஏற்பாடுகளை இலக்கிய பேரவை தலைவா், நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...