

காவல் துறையினா் சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரி நாராயணன் அறிவுறுத்தினாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபடுவதற்கு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மாதந்தோறும் ஆய்வு செய்வது வழக்கம். கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக காவல் துறை வாகனங்கள் ஆய்வு செய்யப்படவில்லை.
இதற்கிடையே, நாகா்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையினா் பயன்படுத்தும் வாகனங்களை செவ்வாய்க்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரிநாராயணன், ஆய்வு செய்தாா். மேலும் வாகனங்களில் குறைபாடுகள் உள்ளனவா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். பின்னா் அவா் காவல் துறையினா் மத்தியில் பேசும்போது, காவல் துறை வாகனங்களை தினமும் முறையாக பராமரிக்க வேண்டும்.
மேலும் காவல் துறையினா் சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.