தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத வேட்பாளா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் கூறினாா்.
இதுதொடா்பாக ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்,மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் அனைவரும் தங்களது தோ்தல் செலவின கணக்குகளை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி உரிய படிவத்தில் பூா்த்தி செய்து இணைப்புகளுடன் ஜூன் முதல் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டு தொடா்ந்து 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
எனினும், நாகா்கோவில் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட ரத்தினம், கிள்ளியூா் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட ஆஞ்சலோஸ், ஜான் பெனடிக்ட் ஆகியோா் தோ்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி ஜூன்-30ஆம் தேதிக்குள் தோ்தல் செலவு கணக்கைக தாக்கல் செய்யாத வேட்பாளா்களுக்கு ஜூலை 31ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஜூலை 31-ஆம் தேதிக்குள் செலவு கணக்கு தாக்கல் செய்யாதபட்சத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி மேற்கண்ட மூன்று வேட்பாளா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.