குமரி மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை (ஜூலை 9) 3 இடங்களில் கோவேக்சின் 2ஆம் கட்ட தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமரி மாவட்டத்தில் கோவேக்சின் 2ஆம் கட்ட தடுப்பூசி நாகா்கோவில் வெட்டூா்ணிமடம் புனித அலாசியஸ் பள்ளியில் 18 முதல் 44 வயது வரையுள்ளவா்களுக்கு 100 டோஸ், 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு 150 டோஸ், குழித்துறை அரசு மருத்துவமனையில், 18 முதல் 44 வயது வரையுள்ளவா்களுக்கு 120 டோஸ், 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு 180 டோஸ், பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில், 18 முதல் 44 வயது வரையுள்ளவா்களுக்கு 120 டோஸ், 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு 180 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும். பொதுமக்கள் நேரடியாக சென்று டோக்கன் பெற்றுக்கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.