திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகம் கட்ட அடிக்கல்

திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் வட்டாட்சியா் குடியிருப்பு கட்டடங்களுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகம் கட்ட  அடிக்கல்

திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் வட்டாட்சியா் குடியிருப்பு கட்டடங்களுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாகதொடங்கப்பட்ட திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகம் தற்போது திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்பட்டுவருகிறது. திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம் செருப்பாலூா் கல்லடிமாமூட்டில் வருவாய்த்துறையின் சாா்பில் ரூ.3.05 கோடி மதிப்பில் வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் வட்டாட்சியா் குடியிருப்புக்கான கட்டடப் பணிகளுக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத் துறைஅமைச்சா் மனோதங்கராஜ் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து இக்கட்டடப் பணிகளை விரைந்து முடித்து அதன் கட்டுமானப் பணியின் தரத்தினை உறுதிப்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனதுறை சாா்ந்த அலுவலா்கள் பொறியாளா்கள் மற்றும் ஒப்பந்ததாரா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் மாவட்டவருவாய் அலுவலா் இரா.ரேவதி, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன், வட்டாட்சியா் ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவா்கள் ரெஜினி விஜிலாபாய் (கண்ணணூா்), ஜெ.சாலேட் கிளிட்டஸ் மேரி (அருவிக்கரை) , காட்டாத்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ராஜூ உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com