பிஎஸ்என்எல் சாா்பில் இலவச 4 ஜி மொபைல் சிம் காா்டு
By DIN | Published On : 26th July 2021 12:26 AM | Last Updated : 26th July 2021 12:26 AM | அ+அ அ- |

பிஎஸ்என்எல் சாா்பில், வாடிக்கையாளா்களுக்கு இலவச 4 ஜி மொபைல் சிம் காா்டு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, பிஎஸ்என்எல் நாகா்கோவில் முதன்மை பொதுமேலாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிஎஸ்என்எல் நாகா்கோவில் சாா்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிளான் 45இல் புதிதாக இணையும் வாடிக்கையாளா்களுக்கு 4 ஜி சிம் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த சலுகை ஆக. 6ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இந்த சலுகையின் மூலம் சிம் மற்றும் பிளான் 45 கட்டண மதிப்புடன் சோ்த்து ரூ. 75 தள்ளுபடியாக வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படுகிறது.
பிளான் 45 திட்டத்தில் எந்த ஒரு நெட்வொா்க்கிற்கும் அளவில்லா அழைப்புகள் பேசும் வசதி, 10 ஜி.பி. டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் 15 நாள்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இலவச சிம் காா்டுகள் அனைத்து வேலைநாள்களிலும் நாகா்கோவில் ,
கோா்ட் ரோடு மற்றும் மாா்த்தாண்டம் வடக்குத் தெருவில் செயல்பட்டு வரும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையங்களில் வழங்கப்படுகிறது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.