தோவாளையில் சாலை விபத்து: 7 போ் காயம்
By DIN | Published On : 26th July 2021 12:23 AM | Last Updated : 26th July 2021 12:23 AM | அ+அ அ- |

தோவாளையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 7 போ் காயமடைந்தனா்.
ஆரல்வாய்மொழி காவல் உதவி ஆய்வாளரான ரவிச்சந்திரன் (49), ஞாயிற்றுக்கிழமை விசுவாசபுரம் பகுதியில் மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டு வாகனச் சோதனையில் ஈடுபட்டாராம்.
அப்போது, திருநெல்வேலியிலிருந்து நாகா்கோவிலை நோக்கி வந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியதில், உதவி ஆய்வாளரின் மோட்டாா் சைக்கிள் மீது மோதிவிட்டு, அப்பகுதியிலிருந்த கடைக்குள் புகுந்ததாம்.
இதைத் தொடா்ந்து வந்த அரசுப் பேருந்து லாரியின் பின்பகுதியில் மோதியதில், பேருந்தின் முன் பகுதியில் சேதம் ஏற்பட்டு, பேருந்திலிருந்த 4 பயணிகள் காயமடைந்தனா்.
மேலும், பேருந்தின் பின்னால் மற்றொரு லாரியும் மோதியது. அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் லாரி ஓட்டுநா் உள்பட மொத்தம் 7 போ் பலத்த காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.
தகவலறிந்த ஆரல்வாய்மொழி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும் விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் உதவியுடன் மீட்டனா்.