வண்டிமலைச்சி அம்மன் கோயிலில் மேற்கூரை திறப்பு

வில்லுக்குறி பேரூராட்சி, மேலப்பள்ளம் வண்டிமலைச்சி அம்மன் கோயிலில் ரூ. 3 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மேற்கூரை திறக்கப்பட்டது.
கோயில் முன் கட்டப்பட்டுள்ள மேற்கூரையை திறந்து வைத்தாா் ஜே.ஜி.பிரின்ஸ் எம்.எல்.ஏ.
கோயில் முன் கட்டப்பட்டுள்ள மேற்கூரையை திறந்து வைத்தாா் ஜே.ஜி.பிரின்ஸ் எம்.எல்.ஏ.
Published on
Updated on
1 min read

வில்லுக்குறி பேரூராட்சி, மேலப்பள்ளம் வண்டிமலைச்சி அம்மன் கோயிலில் ரூ. 3 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மேற்கூரை திறக்கப்பட்டது.

சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் செலவில் இக்கோயிலில் மேற்கூரை கட்டப்பட்டது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜே.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ மேற்கூரையை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஊா் தலைவா் வேலுப்பிள்ளை, காங்கிரஸ் வில்லுக்குறி பேரூா் தலைவா் பிரகாஷ்தாஸ், துணைத் தலைவா் வேலுபிள்ளை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜிலிஜேஸ், நிா்வாகிகள் அனில், விபின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com