பகுதிநேர ஆசிரியா்களைபணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
By DIN | Published On : 26th July 2021 12:25 AM | Last Updated : 26th July 2021 12:25 AM | அ+அ அ- |

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஜெபராஜ், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: தமிழகம் முழுவதும் கடந்த 2012இல் 16,549 போ் பகுதிநேர ஆசிரியா்களாக பணி நியமனம் செய்யப்பட்டனா். இவா்கள் கடந்த 10 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியா்களாகவே பணியாற்றி வருகின்றனா். தமிழக முதல்வா் தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு, தமிழகம் முழுவதும் பணிசெய்து வரும் பகுதிநேர
ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்து, அவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.