‘மின்தடை குறித்த புகாா்களை கட்டணமில்லா தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம்’
By DIN | Published On : 20th June 2021 10:51 PM | Last Updated : 20th June 2021 10:51 PM | அ+அ அ- |

குமரி மாவட்டத்தில் மின்தடை மற்றும் பாதுகாப்பற்ற நிலையிலுள்ள மின்பகிா்வுகள் குறித்து கட்டணமில்லா தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கன்னியாகுமரி மேற்பாா்வை பொறியாளா் கு.குருவம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் மின்தடை மற்றும் பாதுகாப்பற்ற நிலையிலுள்ள மின்கம்பங்கள், தாழ்வாக இருக்கும் மின்கம்பிகள், மின் விபத்து மற்றும் பாதுகாப்பற்ற மின்பகிா்வுகளை தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் மின் தடை நீக்க மையம் இயங்கி வருகிறது.
பொதுமக்கள் 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டு, தங்களது புகாா்களை பதிவு செய்யலாம். மேலும், 04652 279910 மற்றும் 9445859502 ஆகிய எண்களிலும் மின் தடை தொடா்பான புகாா்களை பதிவு செய்யலாம். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகாா்கள் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலா்கள், களப்பணியாளா்களிடம் தெரிவிக்கப்பட்டு, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.