மேல்மிடாலத்தில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மேல்மிடாலம் மீனவா் கிராமத்தை கடல் சீற்றத்தில் இருந்து பாதுகாக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக மீன்வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனிடம் மனு அளித்தவா்கள்.
தமிழக மீன்வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனிடம் மனு அளித்தவா்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மேல்மிடாலம் மீனவா் கிராமத்தை கடல் சீற்றத்தில் இருந்து பாதுகாக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மேல்மிடாலம் மீனவா் கிராம நிா்வாகிகள் தமிழக மீன்வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனை சந்தித்து மேல்மிடாலம் பங்குத்தந்தை ஹென்றி பிலிப் தலைமையில் நடுத்துறை மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் சிபில், மீனவா் காங்கிரஸ் மாநில பொதுச்செயலா் கிறிஸ்டோபா், ஊா் நிா்வாகிகள் அளித்த மனு விவரம்:

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூா் வட்டம், மிடாலம் ஊராட்சிக்குள்பட்ட மேல்மிடாலம் கிராமத்தில் ஆண்டுதோறும் ஏற்படும் கடல் சீற்றத்தால் கிராமம் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், 2019 இல் பொதுப்பணி த்துறை அதிகாரிகள் தூண்டில் வளைவு அமைப்பு குறித்து ஆய்வு செய்தனா். எனினும், இதுவரை தூண்டில் வளைவு அமைக்கப்படவில்லை.

ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஏற்படும் கடல் சீற்றத்தால் கடற்கரை அழிந்து கொண்டே வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே, இங்கு 200 மீட்டா் தொலைவில் 3 தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com